ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தானின் எல்லைப் படை வீரர்கள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவரை இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றனர். ஜுலை 24ஆம் தேதி குப்வாராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் கொன்றனர். இதிலும் ஒரு வீரர் உயிரிழந்தார்.