மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. மேலும், சில விளக்கங்களுக்காக இவ்வழக்கினை, கூடுதல் நீதிபதிகள் கொண்ட வேறு அமர்வுக்கும், நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, திபங்கர் தத்தா பரிந்துரைத்தனர். இதனிடையே, சிபிஐ வழக்கும் நிலுவையில் இருப்பதால், கெஜ்ரிவால் சிறையிலிருந்து விடுதலையாக முடியாது.