ரூ.1.1 கோடி கையாடல் வழக்கில் கைதான உத்சவ் என்பவருக்கு ரூ. 1 கோடி வங்கி உத்தரவாத அடிப்படையில் நீதிமன்றம் ஜாமின் அளித்தது. இதை எதிர்த்து அவர் தொடுத்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், வங்கி உத்தரவாதம் கோருவது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனடிப்படையில் வங்கி உத்தரவாதம் கோர முடியாது. அதற்குப் பதில் வேறு நிபந்தனைகளை விதிக்கலாம் என கூறியது.