ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி ஜூலை 6ஆம் தேதி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிய ரியான் பராக், அபிஷேக் ஷர்மா மற்றும் நிதீஷ் ரெட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு சீசன் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் ஜூலை 6 முதல் ஐந்து சர்வதேச டி20 போட்டிகளைக் கொண்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள் : சுப்மன் கில் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ருதுராஜ், அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜுரேல், நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அஹமது, முகேஷ் குமார், தேஷ்பாண்டே.