2024 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஜிம்பாப்வே சென்று 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இத்தொடரில் ரோஹித், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும், ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் உள்ளிட்டோர் அணியில் இடம்பெறுவர் என்றும் கூறப்படுகிறது.