ஜூன் 4ஆம் தேதி மோடி தோல்வி தினமாக கடைபிடிக்கப்படும் என்று காங்கிரஸ் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதை நினைவுப்படுத்தும் வகையில், ஜூன் 25ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் என அமித்ஷா அறிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடியாக காங்., இவ்வாறு அறிவித்துள்ளது.