விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பார்ப்பனியத்திற்கு எதிரான திராவிடம் என்று பேசிக்கொண்டு இரண்டு திராவிட தலைவர்களுக்கு நடுவில் ஒரு பார்ப்பனிய பெண்ணை படுக்க வைத்திருக்கிறீர்களே? என பேசினார். அப்போது குறிக்கிட்ட செய்தியாளர்கள், “இப்படி கொச்சையாக பேச வேண்டாம்” என்று கூறினர். ஆனால் சீமான் தனது பேச்சை நியாயப்படுத்தி செய்தியாளர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தினார்.