நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா குறித்து தரக்குறைவாக பேசியதாக, அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த கே.சி. பழனிசாமி இந்த புகாரை கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன், ஜெயலலிதா நினைவிடம் குறித்து சீமான் தெரிவித்த கருத்து, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. நினைவுக்கூரத்தக்கது.