அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பைடன், குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேருக்கு நேர் விவாதம் செய்வது அமெரிக்காவில் வழக்கம். இன்று நடைபெற்ற நேரடி விவாதம் தொடர்பாக 565 பேரிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 67% மக்கள் டிரம்புக்கும், 33% மக்கள் ஜோ பைடனுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.