தமிழ்நாடு அரசு வழங்கும் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.10,000 மற்றும் வெள்ளிப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பங்களை இணையதளம் மூலம் கின்ற ஜுலை 24ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு https://tnschools.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.