உ.பி.யின் லக்னோவில் டாக்ஸி ஓட்டுநரை காவலர் ஒருவர் இரக்கமின்றி தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பைசாபாத் சாலையில் அனல் கொளுத்தும் வெயிலால் தண்ணீர் வாங்குவதற்காக ஓட்டுநர் டாக்ஸியை விட்டு இறங்கியதாகத் தெரிகிறது. இந்நிலையில், வாகனத்தை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியதாக கூறி, அவரை உதவி ஆய்வாளர் ராஜேந்திர குமார் லத்தியால் மிருகத்தனமாக தாக்கினார். இந்த வீடியோ வைரலாகவே அவருக்கு கண்டனம் வலுக்கிறது.