வாகன வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வர்த்தக வாகனங்களின் விலையை ஜூலை 1 நாளை முதல் 2 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. பொருட்களின் விலை உயர்வை ஈடுகட்ட இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு அனைத்து வகையான வணிக வாகனங்களுக்கும் பொருந்தும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.