தமிழ்நாடு அரசு துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. அதன்படி குரூப் 2 மற்றும் 2 ஏ பிரிவில் பல்வேறு துறைகளில் 2,327 காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை கடந்த ஜூன் 20ம் தேதி வெளியிட்டது. இதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19 நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.