தமிழ்நாட்டில் குற்ற செயலில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என தமிழக அரசு பொய் கூறி வருவதாக சீமான் விமர்சித்துள்ளார். டிடிஎப் வாசன், பஞ்சு மிட்டாய் வியாபாரி, மீம் கிரியேட்டர்களை தமிழக அரசு அடக்குவதாக விமர்சித்த அவர், குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் நடமாடுவதாக சாடியுள்ளார். சாராயம் விற்கும் அரசாங்கம் கள்ளச்சாராயத்தை எப்படி தடுக்கும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.