டி20 ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. நேபாளுக்கு எதிரான லீக் போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 178 ரன்களை குவித்தது. இதையடுத்து, களமிறங்கிய நேபாள் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து வெறும் 96 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 3 போட்டிகளில் விளையாடி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.