ஐசிசி தொடர் வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணியில் இருந்து தொடர் நாயகன் விருதை வென்ற முதல் பவுலர் என்ற சாதனையை நட்சத்திர வீரர் பும்ரா படைத்துள்ளார். இந்த டி20 உலகக்கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடிய பும்ரா 15 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். பும்ராவின் எகனாமி 4.17ஆக மட்டுமே உள்ள நிலையில், பவுலிங் சராசரி 8.26ஆக உள்ளது. இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ராபர்ட்ஸ் முதல் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் வரை பும்ராவை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.