மேற்கிந்திய தீவுகளில் டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்க கிரிக்கெட் அணிகள், அந்நாட்டுக்கு சென்றுள்ளன. இப்போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ், டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி வெல்ல அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கடுத்து இந்தியாவுக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.