விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டெபாசிட் பறிபோய்விடும் என்பதால் அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்புக்கு திமுகவை காரணம் கூறுவது வியப்பாக இருப்பதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் மட்டுமே எம்பி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக கூறினார். பாஜகவுடன் இணைய வேண்டும் என்பதே அதிமுகவின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.