டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-ஐ விடுவிக்க, அந்த அணியின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ரிஷப்-ஐ விடுவித்து, அவருக்கு பதில் வேறு ஒருவரை எடுக்க டெல்லி நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை டெல்லி விடுவித்தால், அவரை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்கும் என கூறப்படுகிறது.