மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் (603) விளாசிய அணி என்ற சாதனையை இந்திய மகளிர் அணி படைத்துள்ளது. இதற்கு முன் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய அணி 575 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1 இரட்டை சதம், ஒரு சதம், 3 அரை சதங்களை இந்திய மகளிர் அணி விளாசி அசத்தியுள்ளது.