Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சென்னையில் நடைபெற்றுவரும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். 197 பந்துகளில் 205 ரன்கள் அடித்த அவர் ஒரு ரன் எடுக்க முயன்று ரன் அவுட்டானார். தற்போது முதல்நாள் முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 525 ரன்கள் எடுத்துள்ளது.
அதே சமயம் ஸ்மிருதி மந்தனா 149 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 4ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். மேலும் ஹர்மன் பிரீத் கவுர் 42 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 43 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர். மகளிர் கிரிக்கெட்டில் டெஸ்டில் 2வது இரட்டை சதமடித்த வீரர் என்ற சாதனை படைத்தார் ஷபாலி வர்மா.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் பெருமையை ஷஃபாலி வர்மா பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 205 ரன்கள் அடித்த அவர், அதிவேகமாக இரட்டை சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். முன்னதாக, கடந்த 2002ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மித்தாலி ராஜ் முதல் முறையாக இரட்டை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.