டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் ஜோ ரூட் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 87 ரன்களை அடித்த ஜோ ரூட், தனது டெஸ்ட் கெரியரில் 143 போட்டிகளில் பங்கேற்று 12,027* ரன்கள் அடித்துள்ளார். இதற்கு முன் பிரையன் லாரா 11,953 ரன்களுடன் 7ஆவது இடத்தில் இருந்தார். தற்போது, லாராவின் வாழ்நாள் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார்.