அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் பேசிக்கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் ட்ரம்பின் காதில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் மீதான துப்பாக்கிச்சூட்டுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இத்தகைய வன்முறைகளுக்கு துளியும் இடமில்லை என்ற அவர், ஜனநாயகத்தை காக்க தொடர்ந்து போராடுவோம் என்றார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரை சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் சுட்டுக்கொன்றனர். அதேநேரத்தில் ட்ரம்பின் ஆதரவாளர் ஒருவர் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளார்.