2009-2014 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு ஒதுக்கியதை விட, தமிழகத்திற்கு 7 மடங்கு கூடுதல் நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார். தமிழக கட்சிகளின் புகாருக்கு பதிலளித்து இதனை தெரிவித்த அவர், தமிழகத்திற்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ராமேஸ்வரம்-தனுஷ்கோடி ரயில் திட்டத்தை ரத்துசெய்யுமாறு தமிழக அரசு கடிதம் கொடுத்ததாகவும் கூறினார்.