தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பால் கொள்முதலில் தோய்வு இருந்ததாக கூறியவர், தற்போது ஒன்றியங்களில் மட்டும் நாள் ஒன்றுக்கு 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் சில ஆவின் கிளைகள் திறக்க உள்ளதற்கான தேவைகள் இருப்பதாக கூறிய அவர் பொதுமக்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.