தமிழகத்தில் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூரில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 22 ஆம் தேதி திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களிலும், 23ஆம் தேதி திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.