தமிழக அரசு ஒழுங்குமுறை ஆணைய அறிவுறுத்தலின் பேரில், ஆண்டுதோறும் தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாதம் மின் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அச்சத்தில் உள்ள தொழில் துறையினர் தமிழக அரசின் முடிவு குறித்த எதிர்பார்ப்பில் உள்ளனர். தொழில் துறை தத்தளித்து வருவதை கருதி இம்முடிவை நிறுத்தி வைக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.