தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் 10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இரு மார்க்கத்திலும் ராமநாதபுரம் -செகந்தராபாத் வரை செல்லும் சிறப்பு ரயில் சேவை ஜூலை 17 வரை, ஈரோடு – நாந்தெட் ரயில் சேவை செப்டம்பர் 29 வரை, மதுரை மற்றும் கச்சிகுடா ரயில் சேவை அக்டோபர் இரண்டு வரை, நாகர்கோவில் மற்றும் கச்சிகுடா ரயில் சேவை செப்டம்பர் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.