தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை தவிர மற்ற யாருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம், போதை கலாச்சாரத்தால் இளைஞர்கள் அடிமையாகி கூலிப்படைகளாக மாறி வருவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், தமிழகத்தில் தினம் தோறும் 4 கொலைகள் நடப்பதாகவும் போலீஸ் திறனற்று இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்றும் விமர்சித்துள்ளார்.