தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை 243 ரத்து செய்யவும் ஈட்டிய விடுப்பு மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி பி ஐ வளாகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.