தமிழகத்திற்கான நீரை விடுவிக்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நாளை அமைச்சர்த் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் அனைவரையும் ஆலோசித்து சட்ட வல்லுனர்களின் கருத்தை கேட்டறிந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.