தமிழகம் முழுவதும் விதவைகளின் வாழ்க்கை நிலை குறித்து நாகையை சேர்ந்த என்ஜிஓ ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 51% விதவைகள் கணவர் இல்லாத சூழலில் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரலாம் என்ற அச்சத்துடனேயே வாழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 60%க்கும் மேற்பட்டோர் ஆண்டுக்கு ரூ.60,000க்கு கீழ் வருமானம் ஈட்டி வறுமையில் வாழ்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.