தமிழகத்தில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போதைய சட்டங்கள் போதுமான தண்டனை அளிப்பதாக இல்லை. எனவே போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றங்களை முற்றிலும் தடுக்கும் வகையிலும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் வகையிலும் மதுவிலக்கு திருத்த சட்டம் அறிமுகமாக உள்ளது.