சட்டப்பேரவையில் விவாதிக்க அக்கறை இல்லாததால் வெளிநடப்பு செய்து அதிமுகவினர் நாடகமாடுவதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். போராட்டங்கள் மூலம் திமுகவை அசைத்து விடலாம் என்று அதிமுக நினைப்பதாக விமர்சித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி அடையும் என தெரிவித்தார். மோடிக்கு ஜனநாயக உணர்வு இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்வார் எனவும் தெரிவித்துள்ளார்.