தமிழகத்தில் வரத்து குறைவு காரணமாக பெரிய வகை மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதல் சென்னை காசிமேடு மீன்பிடி சந்தை களை கட்டியது. சிறிய வகை மீன்களின் வரத்து அதிகமாக உள்ளதால் பெரிய வகை மீன்களான வஞ்சிரம், பாறை, திருக்கை மற்றும் கொடுவா உள்ளிட்ட மீன்களின் நிலை 1000 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மீன் பிடி தொடைக்காலம் முடிந்து தொடர்ந்து இரண்டாவது வாரமாக விலை உயர்ந்து காணப்படுகிறது.