தமிழகத்தில் ரேஷன் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் மாதிரியான இடங்களில் மது விற்பனை சாத்தியமா என பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஊழலை தடுக்க ரேஷன் கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மது விற்பனையை அனுமதிக்குமாறு ஐடி ஊழியர் முரளிதரன் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.