தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவது குறித்து முடிவெடுக்க கர்நாடகாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை அந்த மாநில முதல்வர் சித்தராமையா கூட்டியிருக்கிறார். இதில் ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி, தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுவது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. முன்னதாக, தமிழகத்துக்கு ஜூலை 30 வரை தினமும் 1 டிஎம்சி தண்ணீரை வழங்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.