விருதுநகர் அருகே சிவகாசியில் நடந்த ஆணவப்படுகொலை சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார்த்திக் பாண்டியை (24), அவரது காதல் மனைவியின் சகோதரர்கள் நேற்றிரவு படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்தவர்களை இன்று காலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களது திருமணம் முடிந்து 8 மாதங்கள் கடந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.