கும்பகோணத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி தரும் மரணம் நிகழ்ந்துள்ளது. அதாவது, கூடுதல் போதைக்காக சானிடைசருடன் போதை மாத்திரை கலந்து குடித்ததில் முருகன் என்பவர் உயிரிழந்துள்ளார். சானிடைசருடன் போதை மாத்திரை கலந்து குடித்ததில் நேற்று இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும் இதுபோன்ற துயரம் நடந்துள்ளது. அரசு உடனே தனிக்கவனம் செலுத்தி இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.