கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக திமுக அரசை கண்டித்து நாளை மறுநாள் ஜூன் 22 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 60 பேருக்கு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் திமுக ஆட்சி தமிழகத்தை 40 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.