தமிழக அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது. அந்தவகையில் மாணவிகளுடைய நலனை அக்கறை கொண்டு தமிழகத்தில் ‘மாதவிடாய் சுகாதாரத் திட்டம்’ மூலம் மாணவிகளுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது.
போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பலர் இன்னும் மாதவிடாய் நேரங்களில் துணிகளை பயன்படுத்துகின்றனர். இதனால், நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் வகையில் செயல்படுத்தப்படும் மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் மூலம் 43 லட்சம் மாணவிகள் பயன்பெறுவதாக அரசு தெரிவித்துள்ளது.