தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் விருதுகளுக்கு, ஆகஸ்ட் 30 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காக பாடுபடும் தமிழறிஞர்கள், படைப்பாளர்களை பாராட்டி விருது வழங்கப்படுகிறது. 2024க்கான தேவநேயப் பாவாணர், வீரமாமுனிவர், நற்றமிழ் பாவலர், தூயதமிழ் பற்றாளர், தமிழ் ஊடக விருது ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க இந்த இணையதளத்தை அணுகவும்.