தமிழகத்தில் 2,500 சதுர அடி நிலத்தில் 3,500 சதுர அடி பரப்பளவுக்குள் வீடு கட்டுவோர் இணைய வழியிலேயே விண்ணப்பித்து, உடனடியாக ஒப்புதல் பெறும் நடைமுறையை தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக துவங்கியிருக்கிறது. இதற்கு https://onlineppa.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெற்ற பொறியாளர்கள் உருவாக்கி அளிக்கும் வரைபடத்தை வைத்து வீட்டின் உரிமையாளரோ, சம்பந்தப்பட்ட பொறியாளரோ விண்ணப்பிக்கலாம்.