2024-25ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 86 நிமிடங்களுக்கு வாசித்தார். பிஹார், ஆந்திராவுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், அதுபற்றிய எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. அத்துடன், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்தும் எந்த அறிவிப்பும் வரவில்லை.