தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்கள் தேவை என கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேச்சு. மேலும் அவர், “நம்முடைய தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் உள்ளார்கள். ஆனால், நமக்கு தற்போது தேவையாக உள்ளது நல்ல தலைவர்கள் தான். நான் தலைவர்கள் என்று சொல்வது அரசியலில் மட்டுமல்ல. ஒவ்வொரு துறையிலும் நமக்கு தலைவர்கள் தேவை. எதிர்காலத்தில் அரசியல் துறையும் ஒரு விருப்பமாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.