வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 7 நாளைக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றுஓரிரு இடங்களில் 7 முதல் 11 செ.மீ மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.