தேசிய கட்சியின் தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பகுஜன் சமாஜ் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளதாக விமர்சித்துள்ளார். கொலையாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற அவர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர் செய்ய வலியுறுத்தியுள்ளார்.