‘தமிழ் புதல்வன்’ திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு, கல்லூரி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது. இதன் மூலம் தோராயமாக சுமார் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.