தமிழகத்தில் கடந்த 10, +2 பொதுத்தேர்வில், சட்டமன்றத் தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, தவெக தலைவர் விஜய் பரிசு வழங்கி வருகிறார். இந்த விழாவில் பேசிய ஒரு மாணவியின் தந்தை, விழாவில் கலந்துகொள்ளும்படி தவெக நிர்வாகிகள் பலமுறை கனிவுடன் கேட்டுக்கொண்டனர் என்றார். தங்களது (ஈரோடு) தொகுதியில் தவெக சார்பில் நிற்கும் வேட்பாளருக்கு தாங்கள் முழு ஆதரவு கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.