தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஜூலை 12 நாளை முதல் இந்த மாதம் 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு தினமும் ஒரு டிஎம்சி வழங்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை பலமுறை கர்நாடக அரசு பின்பற்றவில்லை என்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.